வா பெண்ணே

கண்கள் மூடும்போது
கனவு மறைவதில்லை.
இரவு தூங்கும்போது
எண்ணம் தூங்கவில்லை
தினம் தினம் கூத்துதான்
புதுவயல் நாத்துதான்.

நான்கு விழிகள் பேசும்
ஒரு கவிதையானது
நாடிநரம்பில் நுழைந்து
எந்தன் உதிரமானது.
நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம புண்ணியம்.
நீ எனை சேர்ந்தது
நான் செய்த பாக்கியம்
வா அருகே...நான் உருக
வாழ்வோம் வா பெண்ணே..

நீயும் நானும் சேர்ந்த
இந்த வாழ்க்கையானது
நீல வானம் போல
மிக நீளமானது
உன் மடி தேடினேன்
ஒரு சேயாகவே
நீ எனை தேற்றினாய்
ஒரு தாயாகவே
வா அழகே... நான் பழக...
சேர்வோம் வா பெண்ணே.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (26-Nov-22, 9:36 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : vaa penne
பார்வை : 205

மேலே