உனக்காக ஒரு கடிதம் 3

அன்புத் தோழியே...
ஒரு நாள் இடைவெளி....மன்னிக்கவும். முடிந்தவரை தினமும் தொடர்பில் இருக்க முயற்சிக்கிறேன். ஆதிகாலத்திலிருந்து புராண காலத்திற்கு வருவோம். ராமாயணம்...மஹாபாரதம்...இரண்டும் மாபெரும் இதிகாசங்கள். நமக்கு கிடைத்த பொக்கிஷங்கள். ஏனென்றால் அவை இரண்டும் நம் வாழ்க்கையை பேசியது...வாழ்வின் முறைகளை முறைப்படுத்தியது. காதலை சொன்னது..குடும்பத்தை காட்டியது..சொந்த பந்தங்களை அறிமுகப் படுத்தியது. அதில் நிறைந்திருக்கும் அன்பு...பாசம்...சூழ்ச்சி...துரோகம்...எல்லாவற்றையும் வகைப்படுத்தி நமக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும் இன்றும் இன்றைய வாழ்வியலுக்கும் பொருந்தி வருவது ஆச்சரியம்தான். ஆக நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கும் இவை இரண்டையும் உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். முதலில் கதையை படிப்போம். பின் ஒவ்வொன்றாய் சிந்திப்போம்.அதன் ஆழத்தில் இருக்கும் கருத்தினை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
முதலில் மஹாபாரதத்தை எடுத்துக்கொள்வோம்.பஞ்சபாண்டவர்கள்... கௌரவர்கள்... பேரிலேயே அவரவர் குணாதிசயங்களை வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு...பஞ்ச.... ஐந்து.... ஆம். பாண்டவர்கள் ஐந்து பேர்தான். பஞ்சம் என்றால்... வெறுமை..ஒன்றும் இல்லாது கஷ்டப்படுத்தல். அரச குலத்தில் பிறந்திருந்தாலும், நாட்டுக்காக... வீட்டுக்காக...அங்கீகாரத்துக்காக...அலையாய் அலைந்த கதாபாத்திரங்கள். குந்தி... கள்ள தொடர்பால் பிறந்த மூத்த மகனை... கர்ணனை... மகனே என்று கூப்பிட கூட முடியாமல் கெட்டவர்களுக்கு தாரை வார்த்து கொடுத்த பரிதாப பாத்திரம். பாஞ்சாலி என்கின்ற கதாபாத்திரம் பஞ்சபாண்டவர்களை மணந்த ஒரே பெண் பாத்திரம்.மேலோட்டமாய் பார்ப்பதற்கும்...படிப்பதற்கும்... ஒருமாதிரியான கதாபாத்திரம்.ஆனால் அதன் உள் அர்த்தத்தை யோசித்தால் விளங்கும் பல அர்த்தம். வீரம்..விவேகம்... கருணை...அறிவு... தருமம்...என்கின்ற ஐந்து பண்புகளும் ஒன்றில் ஐக்கியமானால் நூறல்ல ஆயிரம் கௌரவர்களை வென்றிட முடியும் என்று உணர்த்துகின்ற ஒரு கதாபாத்திரம். காந்தாரி என்கின்ற மற்றொரு கதாபாத்திரம். கணவர் குருடென்று தெரிந்ததும்..தன கண்களை கட்டிக்கொண்டு வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த உத்தம பாத்திரம். உதாரணத்திற்கு இக்கதாபாத்திரங்களை பற்றி கொஞ்சம் ஆராய்வோம்.
பஞ்சபாண்டவர்கள்...தங்கள் உண்மைநிலை மறந்து...தருமநிலை பிரண்டு... மதிமயங்கி... சூதாடி...அடமானம் வைத்ததால், வீடிழந்து...நாடிழந்து...சாபம் ..சூழ்ந்து எல்லா கஷ்டங்களையையும்
அனுபவித்து பின் மீண்டார்கள். ஆனால் அவர்கள் தவறை உணர்ந்து தரும நெறிக்குத் திரும்பியபின் கிருஷ்ணபரமாத்மாவின்
உதவியும்...அருளும் கிடைத்தது.
அந்த பக்கத்தை கொஞ்சம் பார்க்கலாம். கௌரவர்கள்.... நூறு அண்ணன் தம்பிகள்...பெரியப்பா...சித்தப்பா...மாமன்மார்கள் என்கின்ற சொத பந்தங்களின் கூட்டம், ஆட்சி.... அதிகாரங்கள்.... அதைவிட அகம்பாவம்...கோபம்..மோகம்...அவைகளையெல்லாம் ஊதி பெருசாக்க சகுனி என்கிற சனி வேற கூட ...பீஷ்மர் போன்ற பிதாமகர்கள்...கர்ணன் போன்ற உயிர் கொடுக்கும் நண்பன் கூட இருந்தும்...பாஞ்சாலி சபதத்தால் கடைசியில் தோற்றுப்போனார்கள்.

தொடரும்....

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (23-Apr-22, 10:03 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 126

மேலே