ஜீவன்- கருத்துகள்
ஜீவன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [47]
- மலர்91 [26]
- ஜீவன் [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
- Dr.V.K.Kanniappan [18]
ஜீவன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
நியாமான கோபம் தோழரே... ஆனால் இந்த கோளாரெல்லாம் தெய்வத்தால் வந்ததோ இல்லை பிசாசினால் வந்ததோ தெரியாது. நான் அறிந்தவரை மனித மிருகங்களினால் வந்தது என்று ஆணித்தரமாக சொல்லுவேன். கண்ணில் தெரியும் சக மனித உயிரை கொல்லும் உரிமை யார் கொடுத்தது? ஏற்றத் தாழ்வுகள் யார் படைத்தது? இப்படி ஒரேயடியாய் தெய்வத்தை குறை கூறமுடியாது. இதில் நம் பங்குதான் அதிகம் என்பது என் கருத்து. இதே கோபம் எனக்கும் இருக்கிறது. தெய்வம் இருக்கிறதா? இல்லையா?.தெரியவில்லை. புரியவில்லை. அன்புடன் சுப.மகேந்திரன்.
அன்பு கவிதை ரசிகனே... கல்லறை காவியம் படைத்து விட்டீர்கள். சுடுகாட்டிற்கு வரும்போதுதான் எல்லோருக்கும் ஞானம் பிறக்கும். திரும்பி போகும்போது ஒட்டிய மண்ணை தட்டி விட்டு போய்விடுகிறோம். நீ இந்த பிணத்திற்கு பின்னால் வரும் நாளைய பிணம். சுடுகாடு சொல்லிக் கொடுக்கும் வாழ்வின் எதார்த்த...பசுமரத்து ஆணியாய் நெஞ்சைத்தாக்கும் நிர்வாண உண்மை.வாழ்த்துகள்.
வணக்கம் சுபா ...உங்களின் கருத்துக்கு நன்றி. நீங்கள் சொன்னது போல் மேடுபள்ளங்கள் இருந்தால்தான் பயணம் சுகமாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை. ஆனால் சவாலாக இருக்கும். சவால்கள்தான் வாழ்வின் சுவையை கூட்டும். சமீபகாலமாக குறைவான ரத்த இழப்புடன் கூடிய அறுவை சிகிச்சைக்குத்தான் முயலுகிறோம்.. ரத்த இழப்பே இல்லாத அறுவை சிகிச்சைக்கு சாத்தியமே இல்லை. இதையெல்லாம் உணர்ந்து சமரசம் செய்து கொண்டால் வாழ்வில் சிறிதளவாது நிம்மதி கிட்டும் என்பது என்னுடைய தாழமையான கருத்து. மீண்டும் நன்றி நண்பரே..இப்படி கருத்துக்களை பரிமாறுங்கள். என்னை செதுக்கி கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி
வனத்தை அழித்தோம். வீதி சமைத்தோம். வீதியெல்லாம் விலங்கினம். வீட்டிற்குள் மனித இனம். அருமை. எதார்த்த உண்மை. தொடருங்கள் தோழரே...வாழ்த்துகள்.
அன்பு நண்பா... நல்ல கவிதை. தொடர்ந்து எழுதவும்
நன்றி நண்பா...ஊக்கங்கள் முன்னேற உரமாகும். நன்றி
அன்பு நண்பா.. உதய நிலவா.. உங்கள் வருத்தம் நெஞ்சில் பதிந்தது. உண்மை அது முகத்தில் அறைந்தது. எத்தனை பேருக்கு இன்று இலக்கணம் தெரியும்? எத்தனை பேருக்கு வெண்பா..கலிப்பா ..புரியும்? கவலை வேண்டாம். உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை பகிர்வதில் எவ்வழி ஆனாலும் அவ்வழி சரியே. மரபு கவிதை அதில் ஒரு வழி. உன் எண்ணம் சமுதாயத்தில் சிறு மாற்றம் கொண்டு வந்தால் அது வெற்றியே. கண்ணதாசன் எழுதாத காவியமா? கருத்தோவியமா? கவலை வேண்டாம்.தொடர்ந்து எழுதுங்கள். பயணம் தொடருங்கள். வாழ்த்துக்கள்.
அன்பு பழனி ராஜன் ஐயா, தங்களின் கருத்துக்கு நன்றி. உங்கள் பதிவுகள் எனக்கு ஊக்க மருந்தாய் இருக்கிறது. மேலும் தொடரவும். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் மற்றும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே உம்மைபுரிந்து கொண்டாள் உண்மை புரிந்து கொண்டாள் இந்த பூவையர் குலமானே....அருமை...உண்மை...வாழ்த்துக்கள்.
நன்றி கோவை சுபா அவர்களே... தங்களின் யூகம் சரிதான். கண்ணதாசனைபோல் எளிமையாய் எழுதிட ஒரு முயற்சிதான். அவர் இமயம். நான் எறும்பு. ஊக்கத்திற்கு நன்றி.
சிறப்பு... கருவாச்சி காவியம் அருமை. தொடருங்கள். வாழ்த்துக்கள்.
ஐயா, தங்களின் கருத்துக்கு நன்றி. நான் இதை கவிதையாய் எழுதவில்லை. பால்
வண்ணம் பருவம் கண்டு என்கின்ற பழைய சினிமா பாடல் இசைக்கு கண்ணதாசன் வரிகளாலும், அந்த இசைத் தாளகட்டுக்கு ரசிகனாகி, அதே தாள கட்டுக்கு நான் முயற்சித்த வரிகள்தான் அவை என்பதனை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன். தங்களின் மாற்று கவிதை அருமை. நானும் இனி ஆசிரியப்பாவில் எழுத முயற்சிக்கிறேன். நன்றி ஐயா..
நன்றி நண்பரே...! தங்களின் கருத்துக்களுக்கு நன்றி. தொடர்பில் இருப்போம்.
நன்றி ஆரோ அவர்களே...நம் எண்ணங்களும்...உள்ளக்குமுறல்களும் சேருமிடம் சேர்ந்தால் சரி. கவித்துவத்தை மெருகேற்றிக்கொள்ள முயலுகிறேன். ஒவ்வொரு அடியும் அனுபவம்தான்...நன்றி ஐயா ...!
நன்றி கவின்...விமர்சனங்கள்தான் எண்ணங்களுக்கு உரமாவது. விமர்சனங்களை வரவேற்கிறேன். தொடரவும்.
முற்றிலும் உண்மை தோழா...மனதை தொடும் விதம் எழுதுவோம்...வாழ்த்துக்கள்.
நன்றி....தோழரே.
தங்களின் பதிவிற்கு நன்றி...
நன்றி அம்மா...தங்களின் கருத்துக்கு.
கவிஞரே ....குடை அருமை. உங்கள் நடை அருமை. தொடருங்கள்