நாணம் போகுமா

உன் கண்ணில் என்னை வைத்து
என் கண்ணில் உன்னை தைத்து
நாள் முழுதும் உன்னை எண்ணி
வாழ்ந்திடுவேன்
உன் நெஞ்சில் என்னை வைத்து
என் நெஞ்சில் உன்னை தைத்து
நான் உந்தன் அருகில் இருந்து
வாழ்ந்திடுவேன்.

பருவம் வந்து பூத்த முல்லை
கொஞ்சி கொஞ்சி பேசும் கிள்ளை
அஞ்சி அஞ்சி அருகில் வர
வெட்கமென்னவோ?
பார்வையால் என்னை வென்று
கோர்வையாய் என்னை கொன்று
சேர்க்கையில் மட்டும் இந்த
நாணம் என்னவோ?

நிமிர்ந்து நிற்கும் முரட்டு காளை
வெடித்து சிரிக்கும் தென்னம் பாளை
துடித்து என்னை அணைக்கவந்தால்
மேனி தாங்குமா?
கண்களால் என்னை தாக்கி
கைகளால் என்னை தாங்கி
பொய்களால் என்னை வாழ்த்த
நாணம் போகுமா?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (28-Jul-23, 7:15 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : naanam poguma
பார்வை : 86

மேலே