எது சாதனை

எது சாதனை?
15 / 02 / 2024

யோசித்துப் பார்த்தேன்
எது சாதனை?
தவழும் குழந்தை
எழுந்து நடந்தால்
அது அதன் சாதனை.
பள்ளிப் பருவத்தில்
உள்ளம் நெகிழ
உயிர் நட்பு கிடைத்திடின்
வாழ்வில் அது தொடர் சாதனை
பொது தேர்வில் வென்று
பந்தயத்தில் முந்தி
மதிப்பெண் பெற்று
உயர் கல்வியில்
சேர்வது வாழ்வின்
முக்கிய சாதனை
மாற்றுத்திறனாளி
அருணிமா சின்ஹா
எவரெஸ்ட் வென்றது
இமாலய சாதனை.
அஹிம்சை ஆயதமேந்தி
அண்ணல் காந்தி செய்தது
அந்நாளில் அற்புத சாதனை.
காலையில் வேலைக்குப்போய்
மாலையில் பத்திரமாய்
வீடு திரும்புதல்
இந்நாளில் பெரும் சாதனை.
தடங்கலின்றி பிறமொழி
கலவாமல் தமிழ் பேசி
மகிழ்ந்தால் தமிழனுக்கு
அது சாதனை.
சாதனைகள் அவசியம்தான்.
அதன் அங்கீகாரம்
அதைவிட அவசியம்.
சாதனைக்கு ஒரு எல்லை உண்டா?
ஒரு படி ஏறினால்
பல படி உயரமே - இது
வாழ்வின் எதார்த்தமே.
நேற்றைய சாதனை
இன்றைய போதனை
இன்றைய சாதனை
நாளைய...
சொல்வதற்கு ஒன்றுமில்லை.
முன்னேறுங்கள்...
முன்னேறிக்கொண்டே இருங்கள்.
சாதனை செய்யுங்கள்
செய்துகொண்டே இருங்கள்.
சாதனைகளை சாதனைகளால்
முறியடியுங்கள்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (22-Feb-24, 6:14 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : ethu saathanai
பார்வை : 73

மேலே