சாகாமல் நிலைத்தேன்…

விழித்தேன் கண்டு நானும் விழித்தேன்
குழைந்தேன் குலைந்தேன் வாழ்வினைத் தொலைத்தேன்
காமனனின் மலர் அம்பு துளைத்ததால்
பொல்லாத காதலில் நானும் விழுந்தேன்.

இதழ்தேன் சுவைத்திட அருகினில் அழைத்தேன்
மலைத்தேன் அது சுவை குன்றிட மலைத்தேன்
அலைந்தேன் கலைந்தேன் தேனுண்ட வண்டாய்
மருகினேன் உருகினேன் மடியினில் மயங்கினேன் .

புரண்டேன் புகைந்தேன் மார்பினில் புதைந்தேன்
அரண்டேன் அணைத்தேன் அழகினில் மிரண்டேன்
புகைத்தேன் தவித்தேன் உயிரினில் புதைத்தேன்
கலைத்தேன் களைந்தேன் உறவினில் களைத்தேன்...

எழுந்தேன் புகழ்ந்தேன் ஏங்கியே தவித்தேன்
தமிழில் எழுதி என்னிதய ஏட்டில் பதித்தேன்
காவியமாய் படைத்தேன் காலத்தால் அழியாத
ஓவியமாய் வடித்தேன் சாகாமல் நிலைத்தேன்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (6-Sep-23, 5:13 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 154

சிறந்த கவிதைகள்

மேலே