எந்தன் வாழ்வல்லவா
எத்தனை முறை பார்த்தாலும்
அலுக்காத உன் இளமை...
ஒவ்வொருமுறை பார்க்கும்போதும்
வற்றாத உன் வளமை..
உன் முகம் என்ன பூத்த தாமரையா?
இல்லையடி பெண்ணே
உன்னை கண்டபின்புதான்
பூக்குமே என் முகத்தாமரை.
நீ துள்ளி குதித்துப் போகும்போது
ஒவ்வொருமுறையும்
என்னுள்ளே
பூகம்பம் வெடிக்குதடி.
கன்னி வெடியே
உன்னைத் தழுவிவிட்டேன்
எங்கே விட்டுவிட்டால்
நான் சிதறிப் போய்விடுவேனோ...
தெரியவில்லை.
ஒன்றுமட்டும் நிச்சயம்
சிதறினாலும்
ஒவ்வொரு சிதறலிலும்
உன்னோடு சேர்ந்தே இருப்பேனே.
நீ எந்தன் வரமா? சாபமா?
எதுவாயிருந்தாலும்
நீ எந்தன் வாழ்வல்லவா?