முதுமை

முதுமையில்....
மதி மயங்கி
மரியாதை இழந்து
மதிப்பையும் இழந்து
தன்னிலை மறந்து
தன்மானத்தையும் இழந்து
சொந்த வீட்டிலேயே
அகதியாய் வாழும்
வாழ்க்கை....
முதியோர் இல்லத்தில்
கதியே இல்லாமல்
கைதியாய் காலந்தள்ளும்
நிம்மதி தொலைத்த
வாழ்க்கை...
மதியாதார் வாசல் மிதியாதே
முதுமொழி...
வாசலை மிதிக்கவும் முடியாமல்
அதை தாண்டவும் முடியாமல்
அகத்தில் அல்லல்பட்டும்
புறத்தில் அவமானப்பட்டும்
புறந்தள்ளப்பட்டு புரையோடிய
வாழ்க்கை
இருக்கும் வரை மதிக்காமல்
இறந்தபின் ஒப்பாரி வைக்கும்
உறவுகளை என்ன சொல்வது?
இதில்
யாரை நொந்து கொள்வது?

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (20-Feb-23, 8:05 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : muthumai
பார்வை : 102

மேலே