கவிதையில் காதலைச் சொல்பவனெல்லாம்

கவிதையில் காதலைச்
சொல்பவ னெல்லாம்
கவிஞனும் இல்லை
கவிதையில் காவியை
போற்றுபவ னெல்லாம்
ஞானியும் இல்லை
கவிதையால் இதயத்தை
தொடுபவ னேஉண்மைக்
கவிஞன் ஆவான்

கவிதை மனம்தொட்டு
விட்டால்புது சென்ன
பழசென்ன jQuery171011014566061146058_1669550868142?

எழுதியவர் : கவின்சாரலன் (27-Nov-22, 5:36 pm)
பார்வை : 47

மேலே