பகல் கறிவகை - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கந்த வருக்கங் கனிவருக்கும் வாதமெழு
மந்த வருக்கமந்த மாம்வருக்கங் - கந்தமுறு
தண்ணடைவ ருக்கந் ததிமோ ரிவைஎன்னா
ளுண்ணடையாற் றோடமறும் ஓர்
- பதார்த்த குண சிந்தாமணி
மதிய உணவில் கிழங்குகள், பழங்கள், வாதப் பொருட்கள், மந்தப் பொருட்கள், மணமும் நீர்த்தன்மை யுமுள்ள காய்கள், எருமைத்தயிர், மோர் முதலியவற்றை உண்டால் சூரிய வெப்பம், உடல் உழைப்பு இவற்றால் அப்பொருட்களின் தோடம் நீங்கும்