திரிதோஷ சம திரவியம் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

ஒன்றிய வாத பித்த
..கபமிவை யுயரா வண்ணம்
நன்றுறு கறிகள் எல்லாம்
..நாளுமே சமைப்பர் ஆய்ந்தோர்
தின்றிடு மிளகு மஞ்சள்
..சீரகம் உயர்ந்த காயம்
வென்றிகொள் சுக்கோ டேலம்
..வெந்தயம் உள்ளி சேர்த்தே

- பதார்த்த குண சிந்தாமணி

மிளகு, மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்கு, ஏலம், வெந்தயம், வெள்ளைப்பூண்டு இவற்றை முறைப்படி சேர்த்து தினமும் உண்டால் முத்தோடங்களும் தன்னிலையில் மாறாவாம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Nov-22, 1:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே