புரிஞ்சிக்கோ
புரிஞ்சிக்கோ...!
13/ 01/ 2024
ஒரு விரலை வெளியே நீட்டினாலே
பல விரல்கள் உனைநோக்கி நீளுமே
ஒரு சொல்லை நீ உதிர்த்தாலெ
பல சொற்கள் உனைவந்து தாக்குமே
நெல்ல வெதைச்சா நெல்லு மொளைக்கும்
தெரிஞ்சிக்கோ
சொல்ல வெதைச்சா சொல்லு தொளைக்கும்
புரிஞ்சிக்கோ
கொறைய மட்டும் பேசினா கனமாத்தான்
நெஞ்சிருக்கும்
நெறைய மட்டும் கண்டிட்டா மனசெல்லாம்
நெறஞ்சிருக்கும்
குறையில்லாதவன் உலகத்துல யார் இருக்கா
தேடிவிடு
நிறைவாக வாழ்ந்தவன்தான் பேர் இருந்தா
சொல்லிவிடு
குறையும் வரும் நிறையும் வரும் சேர்ந்ததுதான்
வாழ்க்கை
இருக்கிறது போதும் என்றிருந்தால் இல்லையொரு
வழக்கு
அறிவுரைகள் சொல்லுறது யாருக்கும்
மிக எளிது
அறிவின்படி நடப்பதுதான் வாழ்வில்
மிக கொடிது
குழந்தைபோல் மனம் வேண்டும் என்பதுதான்
ஆசை
குழப்பங்கள் நிறைந்தே தினம் துடிக்க வைக்கும்
மீசை