கண்ணன் செய்த மாயம் கண்ணன் லீலை -----தரவு கொச்சகக் கலிப்பா

'யாம்கடவுள்' எனஅகந்தை யிலிருந்தான் தேவேந்திரன்
யாமேதான் கடவுளர்க்கும் கடவுள் எனநீ
தானே கிரியாம்கோ வர்தனத்தைக் குடையாய்த்
தூக்கி கோகுலத்தில் ஆயர்க்கு காவலாய்
நின்றாய் துவாபரத்தில் அன்றுநீ கண்ணா
இந்திரனும் கூனிக் குறுகி ஆணவம்போய்
தஞ்சமென நினைச்சரண மடைய நீசெய்த
மாயம்தான் அல்லவா இதுவெல்லாம் அரவிந்தா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (13-Jan-24, 4:15 pm)
பார்வை : 27

மேலே