நிம்மதி நிலைக்குமே

நிம்மதி நிலைக்குமே..!
07 / 04 /2024

தூரத்தில் இருக்கும்போது உன்
நேர்மறைகள் என்னை ஈர்க்குதே
அருகில் இருக்கும்போது உன்
எதிர்மறைகள் என்னை தாக்குதே
நேர்மறை எதிர்மறையின் கலவைதான்
வாழ்க்கை என உணர்த்துதே
இருபாலருக்கும் சமம் இந்த
முடுச்சு என உறைக்குதே
ஏற்றத் தாழ்வுடன் பயணம்
மாற்றம் இல்லாமல் நிகழுமே
சமரசம் செய்து வாழ்ந்துவிட்டால்
வாழ்வில் நிம்மதி நிலைக்குமே..!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (7-Apr-24, 9:07 am)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 54

சிறந்த கவிதைகள்

மேலே