என்னிலும் உயர்ந்தது

என்னிலும் உயர்ந்தது என் பேனா
என்பதற்கு மூன்று காரணங்கள்.

ஒன்று:
ஒரு மையிலும் அதனால்
பன்மைப் பேண முடிகிறது

இரண்டு:
சிந்தனைச்சிக்கலின் போதும் என்னை
குப்பையில் வீசாமலிருக்கிறது.

மூன்று:
தன்னைத் தாழ்த்திக்கொண்டாலும்
என்னை நிமிர்த்தியே வைத்திருக்கிறது.

எழுதியவர் : ஜ. கோபிநாத் (8-Apr-24, 12:43 pm)
சேர்த்தது : Gopinath J
Tanglish : ennilum uyarnthathu
பார்வை : 226

மேலே