அருமையான கவிதை

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

*என்மொழி*

படைப்பு *கவிதை ரசிகன்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

சொர்க்கம் என்றால்
ஒருவருக்கு மகிழ்ச்சியோ
நரகம் என்றால்
ஒருவருக்கு கவலையோ
தந்துவிடாது.....
நரகத்தை கூட
ஒருவர்
விரும்பி ஏற்றால்
சொர்க்கம் தான்....
நரகமும் சொர்க்கமும்
இடத்தில் இல்லை
இதயத்தில் இருக்கிறது....!

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

பிரச்சனை
இல்லாத வாழ்க்கை
வேண்டும் என்று
பிரார்த்தனை செய்கின்றனர்... பிரச்சனைக்கு
இன்னொரு பெயரே!
வாழ்க்கை என்பதை
இவர்கள் என்று
உணரப் போகிறார்கள்...?

☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️

அடுத்த தலைமுறைக்கு
நல்ல வழிகளை
வார்த்தையால்
காட்டியது போதும்
இனியாவது
வாழ்ந்து காட்டுவோம்....!!!

💫💫💫💫💫💫💫💫💫💫💫

பாலோடு
சேரும் தண்ணீர்
பாலாகி விடுகிறது .....
சேறோடு
சேர்கின்ற பால்
சேறாகி விடுகிறது...!

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡

எதையும்
ரசிக்கப் பழகிப்பார்
அழகாகத் தெரியும்
" முள் "கூட....

*கவிதை ரசிகன்*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

எழுதியவர் : கவிதை ரசிகன் (6-Apr-24, 9:04 pm)
Tanglish : arumaiyana kavithai
பார்வை : 72

மேலே