காதல்மழையில் நனைந்த மனசு

Welcome to Prakash(50)....

நெஞ்சில் ஒரு இஞ்சில்
நுழைஞ்ச மலரு.......
கண்ணில் ஒரு மின்னல்
அடிச்ச நிலவு.......

வானில் வந்த மழையில்
பூத்த மொட்டு.......
கொலுசில் வரும் ஒலியில்
எடுப்பேன் மெட்டு.......


அடி வாடி, என் பச்சக்கிளியே.....

நெஞ்சில தினமும், இங்க
குத்தால மழையே.....


மனசில ஏனோ மதம் பிடிச்ச யானை சேதம்....

வயசில ஏறுது ஆயிரம் மடங்கு குதிர வேகம்.....

நெஞ்சில மாறுது பலி வாங்கும் ராஜ நாகம்.....

உசுரில ஊறுது பேய்
பிடிச்ச காதல் வேதம்....

மண்ணில் விழும் துளியில்
மோதுன மல்லி.....
மனச கொஞ்சம் மயக்கி
திருடன கள்ளி.......

நிற்காத நீயும் கொஞ்சம்
என்ன தள்ளி.....
வக்காத என் life கு
முற்று புள்ளி.....


கனவுல தினமும் வந்த புள்ள......

மனச திருடி எடுத்து போற மெல்ல.....

அவ அழக பார்த்து மறையுது மேகம்......
அவளா பார்க்காத sun கும் சோகம்......
கொஞ்சம் கட்டி அணைக்க
எனக்கு மோகம்......
எப்போது தீரும் இந்த தாகம்....
பன்னுவேன் தினமும் நானும் யாகம்.....
நீ கிடைச்ச போதும் அதுவே
யோகம்.......

✍Prakash(vpm).....🚶🏽

எழுதியவர் : பிரகாஷ்.வ (2-Oct-16, 8:56 am)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 129

மேலே