உறக்கத்துளிகள்

__
வண்ணக் கனவுகள் சிதையலாம்
மலரே அசைந்துவிடாதே!
உறங்கிக் கொண்டிருக்கிறது
வண்ணத்துப்பூச்சி.
****************
கடவுளோடு பேசுவதாக
மனைவி சொல்கிறாள்
உறக்கத்தில் வாய்ப்புலம்பும்
கடவுளை அறியாதவளாய்.
********************
தாயின் தாலாட்டில்
விழித்துக்கொண்டு
பாட்டனின் குறட்டைச்சத்தம்
கேட்டபடி நிம்மதியாக உறங்கும்
குழந்தைக்குத் தெரிவதில்லை
உறங்குவதும் முதிர்ந்த குழந்தை எனபது.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (2-Oct-16, 1:46 am)
பார்வை : 86

மேலே