உயிரோவியம் நீ

நீ மட்டும் எனக்கு கிடைக்கா விட்டால் வாழ்கை என்னவென்று அறியாமலேயே என் ஆயுள் முடிந்து இருக்கும்....!

வேலை பழுவோ அல்லது சில நிந்தைகளோ மனது கொஞ்சம் தளர்ந்து நின்றால் தாய்மடிக்கு நிகராய் தன் மடி தரும் என் என்னொரு தாய் நீ....!

ஆழம் விழுதுகள் போல ஆயிரம் உறவுகள் இருந்தும் என் வேரென நீ இருப்பதால் தான் நான் இன்னும் வீழ்ந்து விடாமல் இருக்கின்றேன்....!

இப்பிறப்பில் ஈர்ப்பில்லை அடுத்த பிறவியில் ஆர்வமில்லை
அப்படியும் பிறந்திட்டால்
இனிக்கும் தமிழ் மொழியில் எனக்கென நீ கவிதையாக வாழு
ஒரு அரசனாகி உன்ஆளுமைக்கு
நான் அடிமையாவேன்.....!

உலகின் பார்வைக்கு என் கணவன் நீ
எனக்கு மட்டுமே தெரியும்
என் அன்னையின் என்னொரு உயிரோவியம் நீ
எனக்காக கடவுள் அனுப்பிய இன்னொரு தாய் நீ....!

தீராத மகிழ்வோடும் குறையில்லா சுகபலத்தோடும் நீ வாழ
என் ஆயுள் முழுவதையும்
உனக்காக நான் கொடுப்பேன்
என் உடலிலிருந்து உயிர் என்னை விட்டு போகும் வரை உனக்காக நானிருப்பேன் என்றும் உன் அன்பு மனைவியாய்....!

எழுதியவர் : சி.பிருந்தா (5-Oct-16, 4:45 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : uiiroviyam nee
பார்வை : 112

மேலே