கண்ணில் காதல்

மூன்றடுக்குக் கொண்டைகண்ட,
முழுமதிப் பெண்ணே!
கூந்தலில் சூட மலரெடுக்க,
கூட நின்ற சேடியவள் சூட்ட ,
நாணமோ, வண்ணமோ,
மனதில் என்ன எண்ணமோ?
சிங்காரத் தேவதையே,
அலங்கரித்த நகையெல்லாம் ,
காதலன் கை பட்டு விலக வேண்டும்.
வண்ண மயிலும் முகம் நோக்கா காரணமும்,
கன்னக் கதுப்பில் காட்டி விட்ட காதலே!

எழுதியவர் : arsm1952 (5-Oct-16, 4:33 pm)
Tanglish : kannil kaadhal
பார்வை : 518

மேலே