அழகி

வார்த்தைக்குள் வசப்படாத என்
வரலாற்றின் வத்திக்குச்சியே...!
உன் போதையில் என் பாதை
மறந்துவிட்டேன்...!

உன் கண்ஜாடையில் என் காலம் கடத்திவிட்டேன்..!
உன் கைத்தாங்கலில் நான் இமயம்
அடைந்துவிட்டேன்..!

மண் பொருளாய் இருந்த என்னை
மென்பொருள் போல் ஆக்கிவிட்டாய்
பொன் பொருளாய் மாற்றிவிட்டாய்.!

மந்திரமொழி மங்கையே...!மயக்கும்
எந்திரனின் தங்கையே..! மன்னவனின் மடிமீது உடல் கிடத்தி
ஒட்டியிருந்தாலும்.... தூரம் எங்கு
சென்றாயோ....உயிர்பிரிந்தே....!
சொல்வாயோ....சொல்லாமல் எனைக் கொல்வாயோ...!

எழுதியவர் : ஷெரிப் (27-Sep-18, 7:31 am)
சேர்த்தது : உமர்
Tanglish : azhagi
பார்வை : 439

சிறந்த கவிதைகள்

மேலே