நீச்சல்

நிலையில்லா ஓடத்தில்
நீயும் நானும் பயணத்தில்
நித்திரையின் ஆரம்பத்தில்
நிகழ்ந்துவிட்ட மாற்றத்தில்

முத்திரையும் பதித்துவைக்க
சித்திரமும் செதுக்கிவைக்க
கையுறையும் காலுறையும்
காணாமல் போனதென்ன

நீந்தவும் தெரியாது
நீச்சலும் அறியாது
விரைப்பான முறுக்கோடு
சிறப்பாக நீந்தி
நீர்க்கடலை பிளந்து
நீந்தியதன் மாயமென்ன..!

எழுதியவர் : உமர்ஷெரிப் (20-Jun-23, 6:59 pm)
சேர்த்தது : உமர்
Tanglish : neechal
பார்வை : 57

மேலே