ஜெகதீஷ் பிறந்தநாள் வாழ்த்து கவி
Mechanical dept mama
Jagadeesh அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கவி
நண்பா
உனக்காக எழுதுகிறேன் இந்த வெண்பா
நீ பாரதியார் கல்லூரியில் படித்த
பாரதியார்
கருப்பு ஆடை அணிந்து கருப்பு ஆடுகளை களைவதால்
நீ பணக்காரன்
மட்டுமல்ல
நல்ல மனக்காரன்
சிறந்த குணக்காரன்
தமிழ் இனக்காரன்
நீ படித்தது பொறியியல்
கல்லூரியில்
படிக்கும்போது
உணவுக் கூடத்தில் அதிகம் உனக்கு
பொரியல்
நீதான் செய்வாய்
போராட்டம் என்றால்
மறியல்
தவறு செய்வோர் யாரும் தப்பியதில்லை
நீ வைத்த பொறியில்
உயரத்திலோ நீ ஆறடி
பிறர் துயரத்திலோ
ஓடி வந்து உதவும்
உன் தேரடி
ஆண் அழகன் அல்ல நீ
ஆனாலும் அழகன்
நீ ஆண் வடிவில்
பிறந்த முல்லை
உன் அழகிற்கு
எல்லையோ இல்லை
நீதி மன்றத்தில்
உன் வாதத்தால்
எடுக்கிராய்
பிறர் மீது பாய்ந்துள்ள முள்ளை
உன்னால் தீருகிறது
பலரின் தொல்லை
உன் பெயர் மட்டும் தான் ஜகா
நீ பிரச்சனை என்றால்
யாருக்கும் அஞ்சி
வாங்குவதில்லை
ஜகா
நீ வச்சிருக்க மூணு காரு
அதை விட வச்சிருக்க
பசி என்று யார் வந்தாலும் போடுற
சோரு
உன்னைப்போல
யாரு
நீ கால் முளைத்து
வீதியில் நடக்கும்
தேரு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கவிஞர் புதுவை குமார்