கன்னமிரண்டின் உரசலுக்கு
கன்னமிரண்டின் உரசலுக்கு
*************************************************************************
வண்ணவண்ண வண்டினங்கள் பறந்துலவி சேர்க்கையிட
புன்னகைப் பூக்களதும் வாய்திறந்து தேனவிழ்க்க
பெண்மோகம் தூண்ட ஆணுணர்வு விஞ்சிநிற்க
சன்னலோரப் பார்வையில் என்னையிழுத்துச் சாய்த்தவளே
எண்ணங்கள் ஆயிரமாய் என்மனதை வாட்டுதடி
கன்னமிரண்டின் உரசலுக்கு உணர்ச்சிகள் கூடுகையில்
பின்னமோ உன்மனது முழுமைதான் எப்போது !