பேரழகி
வாலிப வண்ணத்தின் ஓவியமே நீ
மானிட எண்ணத்தின் காவியமே நீ
ஜானிடை மெல்லியதின் தங்கமே னி
வானடை மழைதன்னின் மேகமே னி
காலத்தின் வேகத்தில் நொடிமுள்ளே நீ
காதலின் மோகத்தில் பனைகள்ளே நீ
பேரிடர் மோதலின் பனிப்பூவே நீ
கோரிடும் வறியோர்க்கு செல்வமே நீ
வந்திடுவாயோ...மணம் தந்திடுவாயோ...மனம்
வென்றிடுவாயோ...வனம்
மாற்றிடுவாயோ...சுமை
போக்கிடுவாயோ..சுகம்
கூட்டிடுவாயோ.. எமைச்
சேர்ந்திடுவாயோ...!!
.........................................................
கருத்திலே கள்ளூற்றி கவிதைகள்
நீ பாடி
பொருத்தவா பார்க்கிறாய் பொய்களை நீ கூட்டி...!
சிக்கமாட்டேன் சிங்காரி நான்...
சிப்பாயின் வழிமகள் நான்...!
ஒப்பாரி வைத்தாலும்
ஒருக்காலும் வரமாட்டேன்...!
இப்போது நானே...!!
அக்கறையாய் சொல்லுகிறேன்
தப்பாக எண்ணாதே...!உன்
தாய்சொல்லை தட்டாதே தலைமகன் நீயே..!
உன் தங்கையெனும் மங்கைகளின் சீரான சீர்கொடுக்க.....!
கூரான வாழ்வளிக்க...
பருந்தாய் நீ பறந்தே நீ
பட்டணந்தான் சென்றே நீ..!
மருந்தாய் நீ சிறந்தே நீ
வந்திடும் நாளில்...
விரைந்தே நான்
வந்திடுவேன் மனைவியாக...!
விருந்தாய் நான்
தந்திடுவேன்
தினசரி உனக்கே....!