விதை

விதை..


காணும் இடம் முதல்
காணா இடம் வரை
வீசிச்செல்லுங்கள் வீதி எங்கும்
நாம் விதைக்கும் ஒவ்வொரு விதையும்
வளரும் தலைமுறைக்கும்
வாழும் தலைமுறைக்கும்
பாடமாகட்டும்...

போகிற போக்கில் வீசிச்செல்லும்
ஓர் விதை ..மண்ணுக்குள் உரமாகி
வீறு கொண்டு எழும்
விருட்சத்தின் உறைவிடம்...

ஒவ்வொரு விதையும்
புதிய விடியலின் ஆரம்பம்..

காலால் எட்டி உதைத்தாலும்
மண்ணுக்குள் புதைந்து
மறு மலர்ச்சி தருவேன் எனும்
விதைபோல்.. நாமும்
வாழ்க்கையில் நல்ல நல்ல‌
எணணங்களை வளர்த்து
வானுயர வளம் சேர்ப்போம்..

அன்பு பண்பு பாசமெனும்
விதைகளை விதையுங்கள்
பன் மடங்கு மகிழ்ச்சி விளையும்..

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (30-Jan-18, 2:47 pm)
Tanglish : vaithai
பார்வை : 115

மேலே