காதலர்கள் கவனத்திற்கு பகுதி 2

1.உன்னிடம் மறைக்க நினைத்த
உண்மைகளைக் கொஞ்சம்
உளறிவிடுகிறேன் நம் உரையாடலின்போது
நீயும் கொஞ்சம் கோபித்துவிட்டு
பின் குழந்தையாகிவிடுகிறாய்
இனி உளறுவதற்காகவென
சில உண்மைகளை
மறைக்க வேண்டுமெனத் தோன்றுகிறது
.௨ உனக்கு யாரென்று தெரியாத
என் நண்பர்கள் எல்லோரும்
உன்னைப் பற்றி தெரிந்துவைத்திருப்பதில்
கோபமாக வருகிறது
என்றாலும்
இவரகள் எல்லோரையும் போலவே
என்னையும் உனக்குத் தெரியாது

3.என் சுவாசங்களை அதிகப்படுத்திவிடுகிறாய்
நீ நீரினுள் மூழ்கி
மூச்சடக்கி விளையாடும்போது

4.உன்னைப் பார்ப்பதற்காய்
இந்தப் பேருந்தில் ஏறவில்லை
என்றாலும் ஏறியவுடன்
நீதான் கண்ணில்படுகிறாய்

5.ஏன் இன்று பேசமறுக்கிறாய்
ஏதாவது எல்லை மீறிவிட்டேனா
நேற்றைய கனவில்

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (30-Jan-18, 2:56 pm)
பார்வை : 190

மேலே