தமிழ் இளைஞனே
நீ தரம் குறைந்து தாழ்ந்தவனும்
அல்ல,
வீரம் மறந்து வீழ்ந்தவனுமல்ல!,
மதியிழந்து விதி வழி செல்பவனுமல்ல!,
இடை வளைத்து தடை பல தாணடுபவன் நீ!,
நீதி கெட்டு நாதியற்று வீழ்வது
(வெளிநாட்டில்)ஏனடா?
ஜாதி எரித்து, வீதி எறிந்து
முன்னேறி செல்லடா!
உன் சாதி சனம் தமிழினம் தானடா!
உனக்கொரு தீதென்றால்
அக்னி உமிழும் இனமடா!
வந்தாரை வாழ வைக்கும்
மனமடா!