எதிர் நீச்சல்

"நான் தோத்துட்டேன் பாட்டி என்று வந்தமர்ந்த பேத்திக்கு சில்லென்று மோரை டம்ளரில் ஊத்திக் கொடுத்தார் கமலா பாட்டி...

எத்தன தடவ விழுந்தாலும் எழுந்து நடப்பதற்கு சில மாதங்கள் ஆகும் வளரும் குழந்தைக்கு ...அது போலத்தான் நீ எடுத்து வச்சிருக்குற இந்த படி.. நிச்சயம் ஜெய்ப்ப ..என்று பாட்டி சொன்ன வார்த்தையில் கொஞ்சம் நிம்மதியானாள் மல்லிகா....

அப்பா,அம்மா சென்ற பிறகு இருக்கும் நிலத்தை வைத்துக்கொண்டு கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு படிக்க அனுப்பிய பாட்டியை நினைத்துக்கொண்டாள்...எதிரில் எத்தனை சோதனைகள் வந்தாலும்நிமிர்ந்து எதிர் நீச்சல் போட கற்பித்தவர் பாட்டி...

பெண் என்றாலே கள்ளிப்பாலுக்கு தப்பித்த காலம்போய் கயவரகளின் கண்களில் மாட்டாமல் தப்பிப்பது பெரும்பாடாகும் இந்த காலத்தில் இன்னும் நிறைய கிராமங்களில் பெண் பிள்ளைகள் துணிச்சலோடு படித்து மென்மேலும் வளரவேண்டும் என்பதே மல்லிகாவின் ஆசை..

பெண்பிள்ளைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்பவேண்டும் அவர்களின் படிப்புச்செலவை அரசே ஏற்கவேண்டும் என்ற நிபந்தனைதான் அவளின் ஆசையும் பாட்டியின் ஆசையும்..

எத்தனையோ முறை ஏறி இற‌ங்கிவிட்டாள், இந்த கோரிக்கையோடு நடந்த பாடில்லை...

மறு தினம் அத்தனை பிள்ளைகளையும் ஒன்று சேர்த்தாள்தற்காப்பு கலை முதல்..அத்தனையையும் கற்பிக்க ஆரம்பித்தாள்...

அடுக்களை மட்டுமல்ல ..ஆண்ராய்டு போன்முதல் அகழ்வாராய்ச்சி தொட்டு அடிக்கல் நாட்டி கட்டடங்களுக்கு  காண்ராக்ட் எடுத்துகொடுத்த நேரத்தில் பணியை முடிக்க ஆரம்பித்தனர் ..

அத்தனைபேரும்...ஒன்று சேர்ந்தால்உலகாளும் சக்தியாக திகழ்ந்தனர்..

ஊருக்கு ஊர் தெருவுக்கு தெரு பெண்களை கம்பீரத்தோடு அந்தந்தஊர்களின் ஒத்துழைப்போடு..இதோ ஆளாக்கி விட்டாள் மல்லிகா..

எதிர்வரும் எந்தவொரு பிரச்சினையையும் எதிர்த்து எதிர் நீச்சல் போட கற்பித்த பாட்டியை ரோல் மாடல் ஆக்கி இதோ கம்பீரமாகநடக்கிறாள் மல்லிகா.......

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (22-May-21, 10:57 pm)
Tanglish : ethir neechal
பார்வை : 318

மேலே