விழாமலே இருக்க முடியுமா

ஐ.டி.யில் வேலை வெளிநாட்டில் ஆன்சைட் போக ஆசை மோகம் எல்லாமுண்டு. இதற்கிடையில் வேலை பார்க்கும் இடத்தில் தன்னைவிட இரண்டு வயது அதிகமுள்ள வைஷ்ணவியிடம் இன்னும் சொல்லிக்கொள்ளாத தீராத காதல் ஜானுக்கு.....

'அதென்ன மண்ணாங்கட்டி காதல்' காதல்னா அவளுக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை...

"பேசி சிரித்து ஆசை காட்டி பின்பு அம்மாவுக்கு, அக்காவுக்கு விருப்பமில்லை என சொல்லும் எத்தனை பேரை கண்முன்னே கண்டுகொண்டிருக்கிறேன் தெரியுமா?", என வைஷ்ணவி தன் தோழி கவிதாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்"....

"ஜான் உன் மேல தீராத காதல் கொண்டுள்ளான் வைஷ்ணவி", என கவிதா சொல்ல..

"என்னடி நீயும் புரியாம பேசுற? அவனுக்கு என்ன வயசு? ..எனக்கு என்ன வயசு? ..நாளைக்கு இந்த ஊர் உலகம் என்ன பேசும்? ...அவன ஒன்னும் சொல்லாது....என்னதான் கரிச்சு கொட்டுவாங்க...

அவங்க வீட்ல எப்படி என்னால இருக்கமுடியும்? ஒவ்வொருவரின் கேள்விக்கும் என்னால் எப்படி பதில் சொல்ல முடியும்?"...

தங்கச்சிக்கு கல்யாணம் செய்யணும். அதன்பிறகு நானும் அம்மாவும் எங்க வீட்டையே ஒரு சின்ன ஹோம் மாதிரிவச்சி ..யாரும் இல்லாத எவ்வளவோ பேர் இருக்குறாங்க.. அவங்களுக்கு சேவை செய்யணும்", என்று சொல்லி முடித்தாள்

அத்தனையையும் ஜான் கேட்டுக் கொண்டு நின்றிருந்தான்..

அவள் முன் வந்து இரு கைகளையும் மார்புக்கு நடுவே கட்டிக்கொண்டே அவளையே கண்கொட்டாமல் பார்த்தான்...

"என்னடா என்ன வேணும் உனக்கு?", என்று வைஷ்ணவி கேட்க...

"இன்னைக்கி சாயந்திரம் உங்க வீட்டுக்கு வர்றேன்", என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான்...

"என்னடி கவி இவன் சொல்லிட்டு போறான்?"...

"ம் எனக்கு ஒன்னும் கேக்கல", என்று கவிதா சொல்லி சென்று விட்டாள்...

வீட்டுக்கு வந்த வைஷ்ணவி முகம் கழுவ சென்றவளின் கண்ணில் நீரோடு நீராக கண்ணீர் வழிந்து வர '..காதல் ..தீராத காதல் ..இது உண்மையா இருக்குமா? என்னமோ தெரியல ..எனக்கு ஒன்ன புடிக்கும் ..இல்ல..இல்ல..புடிக்காது' என சொல்லிக்கொண்டு முகத்தை துடைத்தவாறு அம்மாவிடம் வந்தாள்.....

"அம்மா"

"ம்"

"என்னோட ப்ரண்ட் ஒருத்தர் வர்றதா சொன்னாரு ..ஏதாவது டிபன் செய்றியா...?"

"எப்போ வருவார்?"

"போன் வரும் எப்போன்னு தெரியல"

"ம்...கண்மணி எங்க?", என தங்கையைத் தேடினாள்..

கண்மணி அழகாக புடவை உடுத்தி கோவிலுக்கு தயாராகி இருந்தாள்.. அவளையே கண்கொட்டாமல் ரசித்தாள் வைஷ்ணவி..

"கண்மணி ..நீ இப்ப எங்கயும் போக வேணாம்"..

"ஏங்க்கா"..?

"ஒன்ன பொண்ணு பார்க்க ஒருத்தர் வருவார்"..

"என்னடி சொல்ற?", என்று அம்மா அடுக்களைக்குள் இருந்து வரவும் காலிங்பெல் அடிக்கவும் சரியாக இருந்தது..

"சொல்றேன் மா ப்ளீஸ் ..இப்ப ஒன்னும் வேண்டாமே", என கெஞ்சலாக சொல்லிக்கொண்டு வாசலை நோக்கிப்போனாள்..

"வாங்க ஜான்"

அம்மாவும் புன்னகை உதிர்த்து "வாங்கப்பா" ..என அழைத்து அமரவைத்து சிற்றுண்டியை கண்மணி கையில் கொடுத்துவிட, அவள் எடுத்து வந்து அவன் முன்னே வைத்துவிட்டுச் செல்ல..

"ஜான் இது என்னோட தங்கை கண்மணி" என அவள் அறிமுகப்படுத்தி,

"..நீங்க இப்ப இவள பாக்கதான் வந்து இருக்கீங்க" எனச் சொல்ல...

மிகவும் பவ்யமாக எழுந்தவன் கண்மணியையும் அம்மாவையும் பார்த்தான்.. இருவரும் ஒரு சேர கண்களை மூடி 'உங்க இஷ்டம்' என ஆமோதிக்க..

ஒரு அடி முன்னே வந்தான் ஜான்.. வைஷ்ணவிக்கு ஒன்றும் புரியவில்லை... கையை ஓங்கியவன் அப்படியே நிறுத்திக்கொண்டான்...

"என்னடி ஒனக்கு பிரச்சனை? நான் உன்னதான் பார்க்க வந்தேன்.. ..நீ என்னடான்னா ஒன்னோட‌ தங்கச்சிய கொண்டு வந்து நிறுத்துற..

கண்மணிக்கு ஆல்ரெடி நான் மாப்பிள்ளை பார்த்தாச்சி ..ஒன்னோட கனவையும் நான் நிறைவேத்துவேன் ..இதை எல்லாம் அம்மாவிடமும் கண்மணியிடமும் முன்னாடியே சொல்லிட்டேன்... ரெடியா இரு ..கோவிலுக்கு போகலாம்", என உத்தரவிட்டு விட்டுச்சென்றான்...

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (22-May-21, 10:41 pm)
பார்வை : 77

மேலே