தலைப்பு கிணறு

தலைப்பு: "கிணறு"

"அம்மா ..அம்மா"

"...என்னடா? ஏன்டா இப்படி கத்துற?"

"பக்கத்து வீட்ல எதோ பெரிய பைப்பா வந்து இறங்கி இருக்கும்மா"

"ஓ அதுவா ..அவங்க வீட்ல பைப் போடப்போறாங்களாம்..."

"பைப்பா! அப்படின்னா என்னம்மா?"

"...நாம குடிக்கற தண்ணி எடுக்க பக்கத்து தெருவுக்கு போவமே..."

"ம் ..ஆமா"

"தண்ணி சும்மா சொய்யின்னு வருமே"

"ஆமாண்டா.. அது வந்து கார்பரேஷன் தண்ணி ...பூமிக்கு கீழ பைப்ப‌ புதைச்சி இருப்பாங்க ..அதுலேருந்து வரும்..."

"இது அடி பம்பு கையில் புடிச்சிக்கிட்டுஅடிக்கணும்"

"...ஓ அதுல தண்ணி வருமா...?"

"ம் ஆமா ...நம்ம வீட்ல கிணறு இருக்கேம்மா ..நீங்க அதுல தான தண்ணி இறைப்பிங்க ..நான் வந்து நின்னா தள்ளி போன்னு சொல்லிடுவீங்களே ..அவங்க வீட்ல ஏம்மா அது இல்லை?"

"இது நம்ம தாத்தா அந்த காலத்துலயே கையால‌ கொஞ்சம் கொஞ்சமாக தோண்டினது ..ஒங்க பெரிய தாத்தா, பெரியப்பா, சித்தப்பா, பாட்டியெல்லாம் சேர்ந்து ரொம்ப ஆழமா தோண்டினாங்களாம்... எப்பவுமே இங்க தண்ணி வத்தவே வத்தாது ..எல்லாரும் நம்ம வீட்டு கிணத்துல வந்துதான் தண்ணி எடுப்பாங்களாம் ..அதுக்கப்புறம் அவங்க அவங்க வீட்லயே இது மாதிரி பைப், கிணறு எல்லாம் சொந்தமாக வச்சிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்.. ஆனாலும் நம்ம வீட்ல உள்ள கிணறுல எப்பவுமே தண்ணி இருக்கும்...
எப்படி யார் வந்து கேட்டாலும் தண்ணி எடுத்துக்க சொல்லுவோம்... நீயும் பெரியவனானதும்... அப்படியே செய்யனும் சரியா...?"

"ம் சரிம்மா... ஐ..பக்கத்து வீட்ல சத்தம் கேக்குதும்மா ..நான் போய் பாத்துட்டு வர்றேன்.."

"டேய் தள்ளி தூரமா நின்னுக்கோ"

"சரிம்மா ...என்னடா போன வேகத்துல ஓடிவந்துட்ட?"

"......ம்..... பக்கத்து வீட்டு பாபு கிண்டல் பண்றாம்மா ..டேய் பைப் போடப்போறோம்...ஒங்க வீட்ல மாதிரி தண்ணி எறச்சி எடுக்க வேணாம் ...அடிச்சாலே...சும்மா பம்பு செட்டு மாதிரி கொட்டும்ன்னு சொல்றாம்மா..."

"சரி சரி விடு....ஓன்ன மாதிரி அவனும் சின்னப்பையன் தாண்டா...போ போய் பாத்திட்டு வா...."

"அம்மா...அம்மா"

"....ம் என்னடா...?"

"எல்லாரும் கிளம்பிட்டாங்கம்மா ..பைப்ப தேடுனா காணம்மா ..தண்ணி வரலையாம்மா....பாபு அழுதுகிட்டே இருக்காம்மா"

"....ம் அப்போ ஊர் உலகமெல்லாம் பசுமையா இருந்துச்சு ...போட்ட உடனே தண்ணி வந்துச்சு ....ஆனா இப்ப எல்லாம் வறண்டு போய் கிடக்கே....ம் நீ நம்ம கிணற பத்திரமா பாத்துக்கோ..."

"ம் கண்டிப்பா ம்மா....", என்று பாபுவோடு விளையாட சென்றான்.

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (22-May-21, 10:11 pm)
பார்வை : 55

மேலே