லக்ஷ்மி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : லக்ஷ்மி |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 126 |
புள்ளி | : 0 |
Student
“பிசிறு தட்டி, மறைந்து கொண்டே போகிறதே? ”
பேரன் கேட்டான்.. !
தறியிலிருந்த தாத்தா சொன்னார்..
“நெடுக்காக விழுந்தால் போதுமா?
நிலைத்திருக்க
குறுக்கிலும் கோடிட வேண்டும்...! ”
அது சரி..!
யார் குறுக்கில் நெய்வது, வானவில்லுக்கு?
..............................................................
பெண் மனது ஆழமென்று...
..............................................................
பாகம் 7 அ
சரண்யாவின் டைரியில் எழுத நினைத்து, எழுதாதப் பக்கங்களிலிருந்து...
அப்பா இந்த அளவு கோபமாக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.. அண்ணனை கன்னத்தில் அறைந்தே விட்டார்.. எங்களை வீட்டுக்குள் சேர்க்கவில்லை.. அம்மாவை விட்டு மஞ்சள் நீர் தெளிக்கச் சொல்லி, நேரே தேவி பிரதிங்கரா கோயில் மண்டபத்துக்கு எங்களை அழைத்துப் போய் விட்டார்.. அங்கேயே ஒருநாள் முழுக்கத் தங்கியிருக்கச் செய்தார்..
என்னையே சற்று நேரம் உற்றுப் பார்த்த அப்பா உடைந்த
.............................................................
கரண்டி
குழம்பு கூட்டுகிறது..
சோறு படைக்கிறது..
சேலை கட்டுகிறது...
எங்கள் வீட்டுக் கரண்டி..
.............................................................................................................................................
பெண் மனது ஆழமென்று..
..............................................................................................................................................
பாகம் 6
திவாகர், சரண்யா புது மணத் தம்பதிகள்.. திவாகரின் இறப்பில் சில சந்தேகங்கள் எழுவதால் சரண்யா, திவாகர் கடைசியாகத் தங்கியிருந்த கரோலின் பங்களாவைக் காண விழைகிறாள்..!
.................................................................................................................
தலைமுறை
இப்போது மணி என்ன?
அலைபேசியைப் பார்த்தால் பேரன்;
கைக்கடியாரம் பார்த்தால் மகன்;
சுவர்க் கடியாரம் பார்த்தால் அப்பா;
வெயில் விழுவதைப் பார்த்தால் தாத்தா..
கொக்கி முறை-
தலைப்பை படித்து விட்டு பீதியடைய வேண்டாம்.. இது மாணவர்களுக்கான கட்டுரை. படிக்கிறபோது நிறைய விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். (எதிர்பாலினத் தோழமைகளின் பிறந்த நாள் உட்பட)
இவற்றுள் கருத்துருவை மனதிலிருத்துவது ஒரு வகை. அதற்குப் புரிதல் இருந்தால் போதும். உதாரணமாக தீபகற்பமென்றால் மூன்று புறம் கடல் இருக்க வேண்டும் – இம்மாதிரியான விஷயங்கள்..
சூத்திரங்களை ஞாபகம் வைத்துக் கொள்வது வேறு வகை. அதற்குப் புரிதலோடு நினைவாற்றலும் வேண்டும்.
எண்களை நினைவில் வைத்துக் கொள்வது இன்னொரு வகை. உதாரணமாக இரத்த சிவப்பணுக்கள் எத்தனை காலம் இரத்தத்தில் இருக்கும்? 120 நாட்கள் என்பது விடை என
நண்பர்கள் (9)

ஷிபாதௌபீஃக்
பொள்ளாச்சி

கவிபுத்திரன் எம்பிஏ
இம்மை

வாசு
தமிழ்நாடு

கிரி பாரதி
தாராபுரம், திருப்பூர்.
