தமிழில் ஐயம்

அதிர்ஷ்டவசம் என்பது
அதிர்ஷ்டம், என்பதன் தொடர்ச்சி
அதிர்ஷ்டம் என்பது
திருஷ்டம், திருஷ்ய, திருஷ்யம், என்ற சொற்குடும்பத்திற்குள்ளானது.

திருஷ்ய, திருஷ்டி, என்றால் பார்வை, பார்த்தது எனும் பொருள் படும்,
இத்துடன் அ முன்சேர்க்கை கொள்ள, அதன் பொருள் எதிர்ப்பதம் தரும்.
சத்தியம், அசத்தியம், சாத்தியம், அசாத்தியம் என்பதுபோல.

அப்படியெனில், திருஷ்ய, திருஷ்டம் இவையுடன் அ சேர்த்தால்ல் அதிருஷ்ய, அதிருஷ்டம் என்று வரும்.
பார்த்த - பாராத,
எதிர்பார்த்த, எதிர்பாராத

திர்ஷ்டம் - அதிர்ஷ்டம்

பார்த்த, பாராத
அதிர்ஷ்டம் இதற்கு எதிர்ப்பதம், 'அ;வை எடுத்து விட்டால் வரவேண்டும்தானே?
ஆனால் எதிர்ப்பதம் திடீர் என்று துர் முன்சேர்க்கை கொண்டு ஏன் வரவேண்டும்?
துர் அதிர்ஷ்டம்

இந்த அதிர்ஷ்டம் என்பதை தமிழில் ஏன் பாக்கியம் என்றனர்? பிறகு துர்பாக்கியம் என்றனர்? தமிழாக்கத்தை சிதைக்கவா? திராவிடச் சதியா?

பிறகு இதையே ஏன் நல்வாய்ப்பு என்றனர்?

பாக்கியம் என்றால் ஏதோ மதக்கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதாகத்தானே பொருள்! அப்படியென்றால் இதையே அதிருஷ்டம் - அருள், அதிர்ஷ்டவசம் - அருள் வசம் எனலாம்தானே?

துரதிர்ஷ்டவசம் என்பதை சாபவசம் எனலாம்தானே?

அதிர்ஷ்டம் - அருள்
துரதிர்ஷ்டம் - சாபம்

அதிர்ஷ்ட வசம் - அருள்வசம்
துரதிர்ஷ்டவசம் - சாப வசம்

யாரிடமேனும் விளக்க உள்ளதா? சொல்லுங்களேன்!கேட்டவர் : மங்காத்தா
நாள் : 29-Dec-17, 12:21 am
0


மேலே