அஸ்தீர் ASTHIIR - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அஸ்தீர் ASTHIIR |
இடம் | : கொழும்பு |
பிறந்த தேதி | : 21-Dec-1988 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 25-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 272 |
புள்ளி | : 38 |
கோடான கோடி வார்த்தைகள் கிறுக்கிய இவளின் பேனா துணைகொண்டு , முடிவின் முதலாய் உணர்வுகளுக்கு உயிரெழுத , இதையிங்கு தீட்ட நினைக்கின்றாள். பலருக்காய் பலது , சிலருக்காய் சிலது என திருத்த ஏதுமற்ற இதயந்தனில் கிறுக்கல்கள் சிலதை செதுக்க நினைக்கிறாள் நினைவுகளின் பதிவேட்டில் ..
அவமானங்கள் அரங்கேறும் போழுது தான்
தனித்து அகதியான ஞானங்களது உலகறிவை
பிரசவிக்கிறது.
அல்லல்களும் அல்லாது அகன்றதொருப் பொழுதில்,
அல்லது என்றொரு துணைப் பிரஜையை
அதுவே உருவாக்கவும்வல்லது.
ஆக நம்பிக்கையென்பது முடிவற்ற அகன்றதொரு
முடிவிலிப் பயணம்.
பயணிப்போர் ஜாக்கிரதை!
அஸ்தீர்.
"ஹ்ம்..."
உன்னால் உயிர் பெற்ற அன்பிற்கு,
நீயே மரணதண்டனை விதிக்கிறாய்,
விரைந்தும் அதை செயல்படுத்த
நினைக்கிறாய்.
சரியே,
வினயமாக வினாவுகிறேன்
விதியற்றவன் நானென்பதாலா
இத்துனை கொடூரமெனக்கு?
இல்லை இல்லை
விதியோடு விலகாது
விதைக்கப்பட்டவன் இவன்
உன்னுள் விதிக்கப்பட்டவன்
விதிப்படி.
விஷமமது உன்னுள்
விளைந்ததே விஷயம்
வினையம் கொண்டு
விலக நினைக்கிறாய்
நின்னை.
அதுவும் சரியே,
ஆனால் அதற்கான
ஆயுதம் எனதன்பு.
கருவி என் நம்பிக்கை.
படைக்கலம் என் அனுக்கள்.
போர் என் வாழ்வோடு.
சிதைவது என் இருதயம்.
இப்படி என்னுள்
கொடுங்கோள் ஆட்சி
புரிந்தவள் நீ.
மரணதன்டனை விதித்தாய
நலமே உருவாக இங்கே
நாட்டமெல்லாம் நிறைவேற
மீட்டமுடியா நாட்களை
மீண்டும் மீட்டினாலன்றி
விட்டதனைத்தையும்
தொட்டுவிட முடியாதே.
நாழிகைகளோ நகர்ந்துகொண்டே
இருக்கின்றன.
நாளை நாளையென நாளைகளுக்கான
பொழுதுகள்,
புலர புலர புதுமையேதுமின்றி
நேற்றும் இன்றுமான
நிகழ்வுகளை நாட்குறிப்பேடோ
நிரந்தராமாக தனக்குள் புதைத்து
நினைவுச் சின்னங்களாய்
நிதானமாக உள்வாங்க
நிஜமாக சொல்லுங்களேன்
நிரந்தர நிலையானதென்றேதும்
உண்டா இப் பாரில்?
கடந்த பொழுதுகள் யாவும்
கவனமாக பொதிக்கப் பட்டாயீற்று.
கடக்கப் போகும் பொழுதுகளும்
கண்ணியமாக குடியேருமதில்..
குழுமிக் கிடந்த நாற்கள்
குவியமாக விழித்திரையுள்
நினைவிழந்த ஆழ்மனதின்
பேரிரைச்சலோடான மொழிக்கு
இலக்கனத்தில் வார்த்தைகள்
ஏது?
விழியசைவால் கனாக்கூண்டில்
சிறைவைத்து,
நாவசைவில் சிரம் கொய்தலின்
நியாயம் என்னடி?
எது ஏதுவானது எனத்தெரியாமல்
மனவேட்டில்
பதிவிட்டு இயம்பிய வார்த்தைகளுக்குள்
கவிழ்ந்து கிடக்கிறது இவன் நிஜங்கள் பல.
நிழல்களாளேயே நிறைந்து,
மோனித்துக் கிடக்கும் இவன்
உள்ளக்கிடங்கினுள்
மொழிபெயர்க்கவியலா மௌனப்பிழம்புகள்
நிரம்பி வழிய,
வலி சுவாலைக்கு வழிவிட்டு,
மௌனமாகவே விலகி நிற்கிறது
உணர்வற்ற அவள் பார்வையும்.
அலைகளை விட்டொதுங்கி தன்னைத் தானே
மாய்த்துக் கொள்ளும் நுரைகளைப் போல.
அஸ்தீர்..
காத்திருந்த கணங்கள் அதோ
கல்லாக வீற்றிருக்கிறது
இவள் காதலில் மாத்திரம்.
கனத்தின் யுகமும் அதோ,
யூகமேயன்றி யூகிக்க
யாதுமற்றதாய்யான
யதார்த்தமேயது.
சரியா, பிழையாயென
சரமாரியாக வாதித்தாலும்,
சரியோ ,பிழையோ ,
சாதிக்கச் சந்தர்ப்பமற்ற
சாகையும் அதுவே தான்..
எப்படி நாடினும்,
யுகம் யுகமமாய்க் கடப்பினும்
காத்திருந்த கணப்பொழுதுகள்,
பிரிதலின் ப்ரியங்களேயன்றி
வேறில்லை தானே..
அஸ்தீர்...
ஞாபகத்தின் சாரல்கள்
என்றுமே
காதலின் சருகுகள் தான்.
சருகுகள் மட்டுமே தான்!
சாட்சிகள் பல அது சான்று
பகிர்ந்தாலும்,
சருகான ஞாபகத்தின்
ஒளி, ஒலிச் சாரலது
ஒழிந்து ஒழிந்து
ஓடினாலும்,
கண்ணீர்த் தேடலின்
தினத்தேடல்களாய்
மெய்மையையும் பொய்மையையும்
எல்லாவற்றையும் ஏதோ ஒன்றாய்
பிய்த்துப் போட,
பித்தானவன் இறுதியில் இவன் தான்.
அஸ்தீர்...
ஏற்றம் ஏமாற்றம்
இரண்டிற்குமிடையிலான
வேற்று ஒற்றை ''மா ''
என்றொரு எழுத்து அதால்
மயக்கத்தில் கலைகிறது காலங்கள்.
தயக்கத்தில் தாழ்கிறது நேரங்கள்.
அந்த ஆத்திர ஆக்கத்தின்
கலக்கத்தில் மாயமாகி கழிகின்றது
வருடங்கள்.
ஆதலால்
வாழ்நாட்களுக்கும் வாழ்விற்கும் கூட.
வயதாகிப் போகிறது ...
வெட்ட வெளியில் வெங்காற்றாய்,
வெறுமையோடு சுழற்றி அடிக்கிறது
நினைவுச் சூறாவளி நிதம், நிதம்
நிந்தனையோடான நிபந்தனை தனை
நிர்ப்பந்தித்து, நிர்ப்பந்தித்தே
நிலைகுழைச் செய்கிறதது நிதானமாக.
துடுப்புப் போட்டவன் நான்தான்,
துப்பில்லாது சூனியமாகச் சுழன்று
துவள்கிறேன் ஆதலால் தான்!
அஸ்தீர்.
ஜயீர் மாதங்கள் தொட்டுணர்த்தி
ஐநான்கு வருட அணை,ஆணைத்
தொடுதல்
அரிதான ஜயீர் வருடங்களில்
அன்பும் அரிதானதே என் தாயே .
அன்பு ஆயிரமாயிரமாய்
ஆர்ப்பரித்தாலும்
ஆற்றோழுக்கு போன்றவை தான்
நீயல்லா அவையனைத்தும்..
தெளிவால் தேம்பும் இந்நொடிகளில் ,
தெளிவல்லா உன்னொலித்
தாலாட்டால் தழுவிய
அத்தவ பொழுதுகளில் இன்றும்
தத்தித் தவிக்குதம்மா என் விழி
நாட்குறிப்பேடு..
கருவில் உன்முகம் பாராதவள் நான்,
ஆயினும் உன்னை அறியாலல்ல
அன்றே நான்,
உன் உணர்வுகளின் பரிணாமங்களில்
பரிந்துரைக்கப்பட்டவள் இவள் .
அப்பரிந்துணர்,பஞ்சணைக்கு இன்றும்
ஏங்குதம்மா என்னுள்ளம்..
நாளையான நாட்களில்
என