யூகத்தின் தாகம்

காத்திருந்த கணங்கள் அதோ
கல்லாக வீற்றிருக்கிறது
இவள் காதலில் மாத்திரம்.

கனத்தின் யுகமும் அதோ,
யூகமேயன்றி யூகிக்க
யாதுமற்றதாய்யான
யதார்த்தமேயது.
சரியா, பிழையாயென
சரமாரியாக வாதித்தாலும்,
சரியோ ,பிழையோ ,
சாதிக்கச் சந்தர்ப்பமற்ற
சாகையும் அதுவே தான்..

எப்படி நாடினும்,
யுகம் யுகமமாய்க் கடப்பினும்
காத்திருந்த கணப்பொழுதுகள்,
பிரிதலின் ப்ரியங்களேயன்றி
வேறில்லை தானே..

அஸ்தீர்...

எழுதியவர் : அஸ்தீர் (10-Mar-17, 8:29 am)
பார்வை : 103

மேலே