இயற்கை
இயற்கை!
பகலில் பறந்து செல்லும், பட்டாம் பூச்சி சிறகின்,
அழகைக் கண்டு வியந்தேன்!
இரவில் விளக்கேந்தி திரியும் மின்மினி பூச்சி,
கண்கள் சிமிட்டிப் பறந்ததில் மயங்கினேன்!
வியக்கிறேன் இயற்கையின் கோலத்தைக்கண்டு!
மயங்குகிறேன் இயற்கையின் ஜாலத்தைக் கண்டு!