சாரல் சருகுகள்

ஞாபகத்தின் சாரல்கள்
என்றுமே
காதலின் சருகுகள் தான்.
சருகுகள் மட்டுமே தான்!

சாட்சிகள் பல அது சான்று
பகிர்ந்தாலும்,
சருகான ஞாபகத்தின்
ஒளி, ஒலிச் சாரலது
ஒழிந்து ஒழிந்து
ஓடினாலும்,

கண்ணீர்த் தேடலின்
தினத்தேடல்களாய்
மெய்மையையும் பொய்மையையும்
எல்லாவற்றையும் ஏதோ ஒன்றாய்
பிய்த்துப் போட,
பித்தானவன் இறுதியில் இவன் தான்.

அஸ்தீர்...

எழுதியவர் : அஸ்தீர். (20-Feb-17, 7:43 am)
Tanglish : saaral sarukukal
பார்வை : 296

மேலே