மா என்றொரு எழுத்து

ஏற்றம் ஏமாற்றம்
இரண்டிற்குமிடையிலான
வேற்று ஒற்றை ''மா ''
என்றொரு எழுத்து அதால்
மயக்கத்தில் கலைகிறது காலங்கள்.
தயக்கத்தில் தாழ்கிறது நேரங்கள்.
அந்த ஆத்திர ஆக்கத்தின்
கலக்கத்தில் மாயமாகி கழிகின்றது
வருடங்கள்.
ஆதலால்
வாழ்நாட்களுக்கும் வாழ்விற்கும் கூட.
வயதாகிப் போகிறது ...

எழுதியவர் : அஸ்தீர். (16-Feb-17, 5:43 pm)
Tanglish : maa endroru eluthu
பார்வை : 89

மேலே