விடியலை நோக்கி
ரீ .....ரீ ....ரீ ....வீட்டு விசிறியின் சத்தம்
என் செவிகளை தொட்டது
தம்பியின் கைபேசியில் வந்த
messages டொட் டொட் என கேட்டது
தந்தை உறக்கத்தில் இருக்கும் போது
விடும் பெருமூச்சோ ரூ ...ரூ ..என கேட்கிறது
வீட்டு குடிசையில் வேய்ந்திருக்கும் ஓலைகள்
காற்றடிக்க ,சர..சர ..வென ஒலி எழுப்பிகிறது
சிறு அணுவும் தெரியாதபடி
தன் உடலை
ஆமை போல் அந்த போர்வைக்குள்
ஒளித்துவைத்திருக்கிறாள் ,என் அன்னை
இரவுதான் இணைப்பை துண்டித்து
இணையத்தளத்துடன் தன்னை அணைத்துக்கொண்டு
உறக்கம் வரும் வரை புரள்கின்றான் என் தம்பி
அண்ணன் கூட இல்லையெனினும்
அவன் நினைவலையும் ,குரலொலியும்
சுற்றி வருகிறது ,இந்த இனிய இரவில்
பள்ளி படிப்பை முடித்தும் ,
கல்லூரி படிப்பை
தான் கண்ட கனவை நிஜமாக்க
தன் நிழல் கூட தெரியா இவ்விரவில்
சொர்ப்பணமின்றி
புரியாத வார்த்தைகளை புரிதலுடன்
கடிக்கிறேன்....நான்