நல்லவை தொடரட்டும் நலமே சேரட்டும்

நலமே உருவாக இங்கே
நாட்டமெல்லாம் நிறைவேற
மீட்டமுடியா நாட்களை
மீண்டும் மீட்டினாலன்றி
விட்டதனைத்தையும்
தொட்டுவிட முடியாதே.

நாழிகைகளோ நகர்ந்துகொண்டே
இருக்கின்றன.
நாளை நாளையென நாளைகளுக்கான
பொழுதுகள்,
புலர புலர புதுமையேதுமின்றி
நேற்றும் இன்றுமான
நிகழ்வுகளை நாட்குறிப்பேடோ
நிரந்தராமாக தனக்குள் புதைத்து
நினைவுச் சின்னங்களாய்
நிதானமாக உள்வாங்க
நிஜமாக சொல்லுங்களேன்
நிரந்தர நிலையானதென்றேதும்
உண்டா இப் பாரில்?

கடந்த பொழுதுகள் யாவும்
கவனமாக பொதிக்கப் பட்டாயீற்று.
கடக்கப் போகும் பொழுதுகளும்
கண்ணியமாக குடியேருமதில்..
குழுமிக் கிடந்த நாற்கள்
குவியமாக விழித்திரையுள்
குழுமமாக திரையிட
குறிப்பிட்டுச் சொல்லுங்களேன்
நிரந்தரம் ஏததில்?

நிதானமின்றி நிலையாததில்
நிலையாக நிற்றல்
நியாயம் தானா?

மனிதனும் மனிதமும்
மதம், ஏழை, பணமென,
வெவ்வேறு பிரிவுகளில்
வேற்றுமயாக சிதறி புதையுண்டு
புதிர் கனாக்களாக
பூஜியமக்கப்பட்டிருந்ததலின்
நியாமென்ன?

ஒத்திவைக்கப்பட்டட நிகழ்வுகளையும்,
நினைவுகளைத்தவிர
நேற்றைக்கும் இன்றைக்குமான
அல்லது
இன்றைக்கும் நாளைக்குமான
சம்பந்தம் தானென்ன?
கடந்த காலங்களை
கடந்துவிட்டோம் சரி.
நிகழ்காலத்தையும்
கடந்துகொண்டிருக்கின்றோம்
அதுவும் சரியே,
எதிர்காலந்தனை உறுதியாய்
எதிர்வுகூற எவராயினுமுண்டா
எத்தனித்து தான் பாருங்களேன்
இயலுமாயின்..

எதிர்கொள்வோமா என்ற
வினாக்களுக்கு விடைகளும்
வினாக்களையே தோற்றுவிக்கையில்
எதிர்காலந்தனில் உடமையைத் தவிர
உயிரின் நியதியில்
தோற்றுப் போதல்தானே
சத்தியமான சாத்தியம்..

இனியாயினும் உணர்வது
உணர்ந்திதை மனிதமதற்கு
உயிர் கொடுக்க
இச் சித்திரையிலாவது
சிந்தனை செய்வோமா?
தொடங்கும் புத்தாண்டை
மனிதமதற்கு புகலிடமாக
பரிந்துரைப்போமா?

அதை
பெற்றுக் கொடுக்க சமுதாயம்
என்று சிலர் சான்று பகிரின்,
சமுதாயம் நின்னைக் கொண்டும்
தான் பெயர்சூட்டப்பட்டிருக்கின்றது
என்பதை உணர்ந்தால் உன்னதமே..

புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும்
இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

நல்லவை தொடரட்டும்
நலமே சேரட்டும்.

அஸ்தீர்..

எழுதியவர் : அஸ்தீர்.. (13-Apr-17, 3:38 pm)
சேர்த்தது : அஸ்தீர் ASTHIIR
பார்வை : 91

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே