காதலெனும் தீ
காதல் என்னும் தீ என்னுள் காட்டுத்தீயாய் பரவி,
உயிர் வரைக்கும் சென்று கொல்லுதடா இன்று..
யாரிடம் சொல்வது போரிடும் உள்ளத்தை..
வேரோடு நான் விழுந்து கிடக்கின்ற கோலத்தை.
உள்ளுக்குள் இறங்கவில்லை உணவு.
முள்போல குத்துதடா உன் நினைவு.
இரவும் பகலும் சமமாய் தெரிய,. உறவே நீ இல்லாமல்
உயிர் தீ எரிய...
இயக்கங்கள் நின்று என் உடல் உறைய..
வந்து எனை அணைத்துக்குள் காதல் தீ அனைய...