கைகோர்ப்போம்

நம் தேசம் மிளிர்ந்து முன்னேற
விரைந்து கைகோர்ப்போம்

உச்சத்தை உற்சாகத்தோடு
தொட்டுவிட கைகோர்ப்போம்

மற்றவர்க்கு மனதார உதவிட
கைகோர்ப்போம்

ஆலய தேரை பக்தியோடு
இழுத்திட கைகோர்ப்போம்

அழகிய நடனம் இணைந்துஆடிட
கைகோர்ப்போம்

வலுவான பொருளை மிக
எளிதாக தூக்கிட கைகோர்ப்போம்

ஒருவரால் முடியாத பட்சத்தில்
பலராக சேர்ந்து கைகோர்ப்போம்

ஒற்றுமை உயர்ந்து ஓங்கிட
கைகோர்ப்போம்

தீயதை முழுதாய் அழித்திட
கைகோர்ப்போம்

திருமண பந்த்தத்தில்
அன்பாய் நுழைந்திட
கைகோர்ப்போம்

உறவுகள் என்றும் நம்முடன்
நிலைத்திட உளமாற
கைகோர்ப்போம்

நட்பு என்றும் விலகாதிருக்க
புரிதலோடு கைகோர்ப்போம்

நம் சக்தியை நாமே உணர்ந்திட
நம்பிக்கையோடு இரு கைகோர்ப்போம்

எல்லையில் பாதுகாக்கும்
நம்மவரின் குடும்பத்திற்கு
உதவிட கைகோர்ப்போம்

ஐந்தறிவு ஜீவனுக்கு அநியாயம்
நடப்பதை தவிர்த்திட கைகோர்ப்போம்

எளியோரை வலியோராக்க
மனமுவந்து கைகோர்ப்போம்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (13-Apr-17, 11:20 am)
பார்வை : 39

மேலே