நான் நீ
வியர்தால் தான் உழைப்பாளியா?
TL ஊதியத்திற்கு மேல் target வைத்தான், மறுத்தேன்
சப்பாத்திகள்ளி முள்ளெடுத்து உ ரைய வைத்து ஆசனவாய் செருகினாற் போல் சென்னான் , முறைத்தேன்
ரோஜவை தேனில் முக்கி உதட்டில் தடவி ஞாபகப்படுத்தினான்
எனது ஊரின் பெயரையும், என் இன்றைய வாழ்வையும்
இனி சொன்னால் நிலாவையும் பிடிப்பேன் சிரித்தபடி
சென்றான் அவன் ஊரையும் வாழ்வையும் நினைத்தபடி
இங்கு இரைக்கு இரை பழி
பசிக்கு பணியும் கூலி
உண்டு இங்கு வேறுபாடு
காந்தி பசித்ததற்கும்
பசித்தவன் பசித்ததற்கும்
வியர்வையில் மட்டும் அல்ல
முதுகு வலியிலும் உழைப்பாளியை காணலாம்.