பச்சை நிலம்
பூமித்தாயின் கருவூலம்
மனித ஜாதியின் மூலதனம்
விவசாயிகளின் ஜீவாதாரம்
அனைவரின் பசிதீர்க்கும் அன்னதானம்
மேகம் எனும் நட்பின் துணையோடு
ஈரப்பதத்தில் நனைந்து மிதந்து மகிழுந்து கொள்ளும்
வளமான பூமியில்
இதமான காற்றில்
இயற்கையின் அழகி்ல்
ஆனந்தம் கொள்ளும்
பச்சை நிலம்....
தமிழர் திருநாளின்
பிள்ளையார் சுழி
பொங்கும் பொங்கலின்
தாய் தந்தை
கலப்பை மற்றும் மாடுகளின்
தாய் வீடு
நாற்றை கருவுற்று
உரம் என்ற மருந்துண்டு
சக்தி தரும் பானகமான நீரை
நிறையவே அருந்தி
தன்னை தானே நன்றாக பாதுகாத்து
நெற்கதிர்களான குழந்தைகளை
ஆரோக்கியமாக ஈன்றெடுத்து
நம் இல்லங்களுக்கு தாரை வார்ப்பவள் தான்
இந்த பச்சை நிலத் தாய்
கிராமத்து வாழ்க்கையில்
ஓர் அங்கம்
நம் தாய் திருநாட்டின்
ஆன்ம பலம்
அதன் உயிர் மூச்சு உள்ளவரை
நம் சிரம் நிமிர்ந்து இருக்கும்
ஆகவே.....
அதை பொக்கிஷம் போல் பாதுகாப்போம்
நம் கடமையென நினைத்து நாம் செய்திடுவோம்