பச்சை நிலம்

இயற்கையின் உயிர் நாடி
மண்

மண்ணின் மறுவடிவம் நிலம்

குளுமையான நிறத்தோடு
காட்சி தருவது பச்சை நிலம்

நிலம் என்பது அக்ஷயப் பாத்திரம் போல

மனிதனின் தேவைகளை என்றுமே
பூர்த்தி செய்வது அதுதான்

மனிதனின் தேவை முடிந்தால்
நிலத்தின் நிலைமை என்ன

மனிதனின் தேவைக்கு முடிவுதான் உண்டா ?

ஆதாலால்,

பச்சை நிலத்தின் தேவை அறிந்து

பச்சிளம் குழந்தை போல் பாவித்து

அதை சீராட்டிப் பாராட்டி
அதிக கவனம் செலுத்தி

எப்பொழுதும் புதுப் பொலிவுடன்
வைத்திருப்போம்

அதன் விருப்பம் பூர்த்தியானால்

நம் நிலைமை தானே உயரும்

அதற்கும் போறாத காலம் வரும்

சற்றே நோய்வாய்ப்படும்

இறைவனின் துணையோடு,
இயற்கையின் ஆசியோடு

நல்ல உள்ளம் கொண்டு
கை கொடுத்தோமானால்

மீண்டும் சிலிர்த்து எழும்

நம் சந்ததி முடியும் மட்டும்
நம் கூடவே அதுவும் இருக்கும்

நிலத்தின் அருமை தெரியாதவர்கள்

அதை கவனிக்க பொறுமை இல்லாவதர்கள்

பணமே குறிக்கோள் என்று வாழ்பவர்கள்

ஆசை என்ற நோயிடம் தஞ்சம் அடைந்தவர்கள்

முற்றிலும் வேறு உலகத்திற்கு நிலத்தை
அடகு வைப்பர்

அடி முட்டாளான நம் ஜாதியினர்

பச்சை நிலம் என்ற பெயர் மறைந்து

பல மாடி கட்டிடம் என்ற
புது பொலிவுடன் கம்பீரமாக
வீற்றிருப்பாள் நம்

பச்சை நில சொந்தக்காரி

உள்ளத்தால் அழுதுகொண்டு
தன் விதியை தானே நொந்து
கொண்டு

இளமைக்கால நினைவுகளை

மனதால் அசை போட்டுகொண்டு

தன்னால் முடிந்த மட்டும்

தன் உழைப்பை தந்துகொண்டு

அந்த கட்டிடத்தின் அஸ்திவாரமாய்

அமைதியாய் தூங்கி கொண்டிட்ருப்பாள்

ஒரு காலத்தில் "பச்சை நிலம்" என்ற

பெருமை மிக்க பெயர் கொண்டவள்.

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (13-Apr-17, 11:18 am)
Tanglish : pachchai nilam
பார்வை : 49

மேலே