ஆறோடும் நீரோடும்
ஆறோடும் நீரோடும்
ஆறோடும் நீரோடும்
வயல் பரப்பெங்கும்
சீராய்ப் பாய்ந்தோடும்
எங்கள் ஊரெங்கும்
விதை மண்ணுக்கு
உயிர் சேர்க்கும்
வயல் பரப்பிற்கு
பலம் சேர்க்கும்
கிராமத்தின்
அழகு மிளிரும்
நம் குடி நீரின்
தாகம் தணியும்
வாய்க்கால்கள்
பல இருக்கும்
நம் தேவைகளும்
அதில் அடங்கும்
பறவைகளும்
படையெடுக்கும்
நீர் அருந்தி
மனமகிழும்
மீன்களும் துள்ளி
விளையாடும்
நம் பார்வைக்கு
பரவசமாகும்
ஆற்றில் குளிப்போர்க்கு
உடல் ஆரோக்கியம்
சீராகும்
மனம் புத்துணர்ச்சி
பெற்றுவிடும்
ஆற்றங்கரையோரம்
அந்திசாயும் பொழுதோடும்
சலனமின்றி ஓடிடுமே
ஆறோடும் நீரோடும்