உலகை மாற்றும் திறனாளி - நாகூர் கவி

முழங்கால் முடக்கம்
இவருக்கன்று
முயற்சியின் உருவம்
இவர்தான் என்று
மூளைக்குள்ளே ஏற்றிடு தோழா
மூடர்முன்னே கூறிடு தோழா...

கடின உழைப்பு மூலதனம்
கண்டும் போனால் மூடத்தனம்
காணொளி சொல்லும் பாடம் தினம்
கருத்தில் கொள்வாய் நீயும் தினம்...

ஊனமென்று ஒருபோதும் சொல்லாதே
ஊக்கத்திற்கு தடைபோட்டு நில்லாதே
உதவாக்கரை சொல் என்றும் கல்லாதே
ஊனச்சொற்கள் எவரையும் வெல்லாதே...

வாழ்வில் விளக்கினை ஏற்றிட பாரு
வாழ்வும் விளக்கி ஏற்றிடும் பாரு
முட்டுக்கட்டை போடுவது யாரு
முடிந்தால் அதனை போட்டிடு கூறு...

உலகை மாற்றிடும் திறமைகள்
பற்பல கொண்டவர் மாற்றுத்திறனாளி
உவந்து படித்து இதை நீ அறிந்தால்
கற்றவர் முன்னும் நீதான் அறிவாளி...!

நாகூர் கவி

எழுதியவர் : நாகூர் கவி (5-Oct-16, 11:57 pm)
பார்வை : 218

மேலே