இரட்டுற மொழிதல் -- கணினியும் பெண்ணும்
கணினியைத் தொட்டவுடன் கண்கவரு மன்றோ
அணியெனப் பெண்களை அன்புடன் காக்க
பணிகள் பலவும் பரிவால் நடக்கக்
கணினியும் பெண்ணுக்கு நேர் .
பொருள் :-
கணினியைத் தொட்டவுடன் கண்கவரும் காட்சிகள் திரையில் வரும் - பெண்களைத் தொட்டவுடன் கண்கவரும் கனவுகள் மனத்தினில் வரும் .
கணினி எனும் கருவியை மகிழ்ச்சியுடன் பாதுகாத்தல் வேண்டும் - அழகாய் இருக்கும் பெண்களையும் அன்புடன் பாதுகாத்தல் வேண்டும் .
கணினி பணிகள் பலவும் செய்யும் இயல்புடையது - பெண்களும் தனது இல்லத்தில் பல பணிகளைச் செய்யும் இயல்புடையவர்கள் .
கணினி நாம் கையாளும் விதத்தில் வேலை செய்யும் - பெண்களும் பரிவுடன் நடந்து கொண்டால் அவர்களும் மகிழ்வார்கள் .
இதனாற்றான் கணினியும் பெண்ணும் ஒன்றாம் .