இரட்டுற மொழிதல் - குழந்தையும் வெண்ணிலவும்

எண்ணிலா இன்பமு மென்வீட்டி லுண்டாகும்
தண்ணொளியாய்த் தத்தித் தவழ்ந்திடும் செல்வமாம்
பெண்ணவளின் கண்விழியாம் பேசும் பலகதைகள்
வெண்ணி லவும்குழந்தை யே.

பொருள் :-

குழந்தைகள் இருந்தால் எண்ணற்ற இன்பம் வீட்டினில் உண்டாகும் - வெண்ணிலவும் வானில் உலா வரும்போது எண்ணிலா மகிழ்ச்சி உண்டாகும் .

குழந்தைகள் தத்தித் தவழும் தன்னோளியான செல்வம் - வெண்ணிலவும் வானில் நீந்தித் தத்தி தவழ்ந்து குளிர்ச்சியைத் தரும் .

குழந்தையைப் பெற்ற தாய் தனது கண்விழிக்குள் வைத்துக் காப்பாள் . - வெண்ணிலவையும் பெண்ணின் கருவிழி போல் பாதுகாக்கும் மேகம் .

குழந்தைகள் தன் கண்களால் பல கதைகள் பேசும் - வெண்ணிலவைப் பற்றியும் பல கதைகள் உண்டு .

இதனாற்றான் குழந்தையும் வெண்ணிலவும் ஒன்றாம் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (5-Oct-16, 10:03 pm)
பார்வை : 42

மேலே