என் ஆனந்த மழை

சிறகுகள் கொண்டுவந்த
வண்ணத்துப்பூச்சிகள்
அணிவித்துவிட்டுப் போக
அலங்காரத்தோடு நிற்கின்றன

புறக்கணித்துப் போனத்தென்றல்
புதிய உற்சாகத்துடன்
கைநீட்டுகிறது.

இது மார்கழி இல்லை என்றாலும்
குளிகிறது மனசு.

பாலைவனத்துக் கொடுங்கோடை
கடந்து அருகில் வந்துவிட்டது
பாலாறு.

முகாரிக்கு முற்றுப்புள்ளி
வைத்துக்கொண்ட
புல்லாங்குழல் சிலநாட்களுக்கு
முன்னதாகவே பூபாளம்
இசைக்கத் தொடங்கிவிட்டது.

இலையுதிர்த்துக் கிடந்த
என் மரங்கள் எல்லாம்
சந்தோசப் பூக்கள் பூத்துக்
குலுங்குகின்றன.

வசந்தம் என் தேசத்தின்
விமான நிலையத்தில்
வந்துநிற்க இதோ
நிறைவுக்கு வருகிறது
இரண்டாண்டு வனவாசம்

இதோ..இன்றைய வானம்
முகில்கள் துடைத்து
என் பாதைகளை
பரிசுத்தமாக்குகிறது..
என்றாலும் குடைப்பிடிக்காமல்
நனையப்போகும் என்
என் ஆனந்த மழையில்
நீங்களும் சேர்ந்து கொள்ளுங்களே..

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (5-Oct-16, 4:12 pm)
Tanglish : en aanantha mazhai
பார்வை : 119

மேலே